திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு:

0
1

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு:

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகர். இவர் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை கல்லாமேடு பகுதியில் சொந்தமாக அமைத்து வரும் பெட்ரோல் நிலையம் இடத்திற்கு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

2
4

இதுகுறித்த தகவலின்பேரில், காவல்துறை கண்காணிப்பாளர் ஜனனிப்ரியா தலைமையிலான தனிப்படையினர் நேற்று (25.10.2021) சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சொரியம்பட்டி குவாரியில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வரப்பட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து  அனுமதியின்றி மணல் அள்ளிய 2 ஜேசிபி இயந்திரங்களையும், 3 லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  டிரைவர்கள் ஆறுமுகம், கண்ணன், பன்னீர்செல்வம், செல்வராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.