குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு திருந்திய பெண்களுக்கு காவல்துறை நடத்திய மறுவாழ்வு விழிப்புணர்வு கூட்டம்!

0
1

திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கள்ளச்சாராயம் மற்றும் மது சம்மந்தமான குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய பெண்களுக்கு மறுவாழ்வு பெறுவதற்கான விழிப்புனர்வு நிகழ்ச்சி கம்பரசம்பெட்டை அகிரகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

4


நிகழ்ச்சிக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார், மேலும் திருச்சி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் முத்தரசு வரவேற்புரை நிகழ்த்தினார்.

2

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் முன்னிலை வகித்தார், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மற்றும் பெர்ல் அறக்கட்டளை நிறுவனர் ராமச்சந்திரன், ஹசினா பானு, டாஸ்மாக் மண்டல மேலாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.