திருச்சி டாஸ்மாக் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

0
1

நேற்று 23.10.2021 சனிக்கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சுமார் 10 டாஸ்மாக் கடைகளில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், வசந்தன், பொன்ராஜ், இப்ராஹிம், பாண்டி, ஜஸ்டின் மற்றும் வடிவேல் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

2
4

ஆய்வு செய்ததில் ஒரு சில கடைகளில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படாமலும் இரண்டு கடைகளில் குளிர்சாதன பெட்டி சரிவர வேலை செய்யாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இரண்டு கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக பார் நடைபெற்றது கண்டறியப்பட்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உணவு பாதுகாப்பு துறை பிரிவு 55-இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மேல்நடவடிக்கை எடுப்பதற்காக பரிந்துரைத்துள்ளனர்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் ரம், பிராந்தி மற்றும் விஸ்கி போன்றவைகளில் 4 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் டாஸ்மாக் கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் பார்கள் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அனைத்து பீர் பாட்டில்களிலும் காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களும் இதுபோன்ற புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22

3

Leave A Reply

Your email address will not be published.