தொண்டை வலியை போக்கும் மருத்துவமுறைகள் – Natural Remedies | Ntrichy

தொண்டை வலியை போக்கும் மருத்துவமுறைகள் – Natural Remedies
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டைவலி, நெஞ்சகசளி, இருமல், தலையில் நீர் ஏற்றம் போன்ற பிரச்னைகளுக்கு முசுமுசுக்கை, ஆடாதோடை, வெற்றிலை, துளசி போன்றவை மருந்தாகிறது.
முசுமுச்சுகை இலையை பயன்படுத்தி தொண்டைக்கட்டுக்கான தேனீர் தயாரிக்கலாம்.

தேவையானபொருட்கள்:
முசுமுசுக்கை, ஆடாதோடை, அரிசிதிப்பிலி, தேன்அல்லதுபனங்கற்கண்டு. 10 முசுமுசுக்கைஇலை, 2 ஆடாதோடை இலை ஆகியவற்றை எடுக்கவும். இதனுடன் 4 அரிசி திப்பிலியை பொடிசெய்து போட்டு தண்ணீர்விட்டு கொதிக்கவைக்கவும். இதை வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்துவர தொண்டைகட்டு விலகிப்போகும். சளி பிரச்சனை சரியாகும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட ஆடாதோடை அற்புத மருந்தாகவிளங்குகிறது. இது கொத்துக்கொத்தாக வெள்ளைநிறபூக்களை கொண்டது. தொண்டைக்கட்டை சரிசெய்யும் தன்மைஉடைய முசுமுசுக்கையின் தாவரபெயர் மதராசபட்டனா.
இதன் இலையின் பின்புறம் சொரசொரப்பை பெற்றிருக்கும். இது பல்வேறு நன்மைகளைகொண்டது. ஆடாதோடைபொடி, முசுமுசுக்கைபொடி நாட்டுமருந்துகடைகளில் கிடைக்கும்.
கண்டங்கத்திரி செடியை பயன்படுத்தி தொண்டைவலிக்கான மருந்துதயாரிக்கலாம்- Natural Remedies
தேவையானபொருட்கள்:
கண்டங்கத்திரி, திப்பிலி, பனங்கற்கண்டு. கண்டக்கத்திரிசெடியில் முட்கள் அதிகம் இருக்கும் என்பதால் இலை, காய்களை பாதுகாப்பாக எடுக்கவும். இதனுடன் 2 திப்பிலிசேர்க்கவும். சிறிதுநீர் விட்டு அரைஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும்.
இதைவடிகட்டிகாலை, மாலைஎன 3 நாட்கள் குடித்துவர சளிவெளியேறும். இருமல் இல்லாமல்போகும். தொண்டைவலி சரியாகி இதம்தருகிறது. மார்பககோளாறுகள், சளி, இருமல், ரத்தஓட்டம், இதயம் சம்மந்தமான பிரச்னைகளுக்கு கண்டங்கத்திரி மருந்தாகிறது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. வெற்றிலை, லவங்கம், துளசி ஆகியவற்றை தேனீராக்கி குடிப்பதால் ஆரம்பநிலையிலேயே தொண்டைவலி வராமல் தடுக்கலாம்.
தொண்டைவலி, சளி, இருமல் பிரச்னைகளுக்கு இல்லத்திலேயே எளிய மருத்துவத்தை செய்து பயன்பெறலாம். இது பக்கவிளைவுகள் இல்லாதது.

DR.NANDHINI V MOHAN- BNYS, M.Sc (Psy)
NATUROPATHY AND YOGA PHYSICIAN
NVM DIET AND LIFESTYLE CLINIC
THANJAVUR – 613001
(AVAILABLE ONLINE CONSULTATION)
