திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ‘செப்பர்டு’ விரிவாக்கத்துறையின் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா

0
1

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ‘செப்பர்டு’ விரிவாக்கத்துறையின் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ‘செப்பர்டு’ விரிவாக்கத்துறை சார்பாக சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாக் கொண்டாடப்பட்டது. இரண்டாம் ஆண்டு முதுகலை உயிர் வேதியல் துறை மாணவர்கள் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுடன் கொண்டாடினர்.

 

2

இவ்விழாவிற்கு பள்ளித்தலைமை ஆசிரியை திருமதி ஹெலன் சத்யா தலைமை தாங்கினார். அவர் தம் தலைமையுரை யில், பெற்றோர்கள் தம் பெண் குழந்தைகளுக்குக் கல்வியறிவு கொடுக்க வேண்டும் என்பதைவிட வயது வந்த உடன் திருமணம் செய்து வைப்பதிலேயே அதிக கவனமாக உள்ளனர். அதைப்போலவேபெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளைக் கொடுப்பதிலும், குழந்தைகளைப் பராமரிப்பதற்குமே பயன்படுத்துகிறார்கள்.‌ இந்தப்போக்கு அறவே நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஆற்றுப்படுத்தநர் முனைவர் திருமதி எஸ்.பரமேஸ்வரி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில், பெண்கள் கல்வி, உரிமைகள், பாதுகாப்பு, சுதந்திரம் இவைகளைப் பெற யாரையும் எதிர்பார்க்கக் கூடாது. மாறாக நாம்தாம் அதனை பெற்றுக் கொள்ள கல்வியறிவை வளர்த்து, அதனால் தன்னம்பிக்கைபெற்று அவலங்களுக்கு எதிராக அணிநின்று போராடும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைதீ தொழிலாளர் கொடுமைகள்,பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அரசு இலவச குழந்தைகள் உதவி தொலைபேசி எண் 1098 என்பதை பயன் படுத்தித் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவுப் வலியுறுத்தினார்.

4

உயிர் வேதியல் துறைப் பேராசிரியர் செல்வி. வெங்கடேஸ்வரிவாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில் பெண் குழந்தைகள் வீட்டிலும் பொது வெளியிலும் தைரியமாக பேசிப் பழகி தங்கள் உரிமைகளையும் தங்கள் தேவைகளையும் பெற வேண்டும். என்றுமே நமக்கான உரிமைகளை நாம்தாம் போராடிப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னதாக விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ் .லெனின் தொடக்கவுரையாற்றினார். பெண் குழந்தைகளுக்குக் கல்வி ஒரு முக்கியமான ஆயுதம். அது அவர்களைச் சிந்திக்க, தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க பெண் சுதந்திரத்தை முழுமையாகப்பெற உதவும். அதறகு முழுமையான கல்வியை பெறவேண்டும் என்று தம் கருத்தைப் பதிவு செய்தார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இரண்டாம் ஆண்டு முதுகலை உயிர் வேதியல் துறை மாணவர்கள் பள்ளி ஆசிரிய ஆசிரியர்களுடன் இணைந்து செய்திருந்தனர். முன்னதாக மாணவி பாக்கியலட்சுமி வரவேற்புரையாற்றினார். மாணவி சுஷாந்த்தினி நன்றியுரையாற்றினார்.

மாணவர்கள் அருண்குமார்,ஹேமப்பிரியா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் திரு முத்தையா உள்ளிட்டோர் பஙகேற்ற இந்நிகழ்வில்,, 6,7,8 ஆம் வகுப்பு மாணவிகள் 41 பேர் தங்கள் பெற்றோர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

– ஜோ.சலோ

3

Leave A Reply

Your email address will not be published.