உப்பில் அயோடின் கண்டறியும் முறை குறித்து மாணவிகளுக்கு விளக்கம் – உணவு பாதுகாப்புத்துறை வகுப்பு!

0
1

நேற்று 22.10.2021 வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்டம் அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக அயோடின் விழிப்புணர்வு தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

Helios

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுஹாஷினி எர்னஸ்ட் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் உப்பில் அயோடின் கண்டறியும் செய்முறை விளக்கத்தை மாணவிகளுக்கு செய்து காண்பித்தார். மேலும், உணவு பொருட்களில் எளிதில் கலப்படத்தை கண்டறியும் முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் மாணவியர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

2


இந்நிகழ்ச்சியில் அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 200 நபர்கள் பங்கேற்றனர். மேலும் கல்லூரி இயக்குனர் சாகுல் ஹமீது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேற்படி நிகழ்ச்சியில் உப்பு நுகர்வோர் பாதுகாப்பு மாவட்ட தலைவர் மோகன் கலந்து கொண்டு பேசினார்.மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், ஸ்டாலின். வசந்தன், அன்புச்செல்வன், ஜஸ்டின், பாண்டி, சண்முகசுந்தரம் மற்றும் வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் பொதுமக்கள் உணவு கலப்படம் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு கீழ்கண்ட எண்களில் புகார் தெரிவிக்கலாம்

தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22

3

Leave A Reply

Your email address will not be published.