திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: 

0
1

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: 

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள், பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி பெரிய கடை வீதி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் தெப்பக்குளம் அருகே தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

2

இந்த காவல் உதவி மையத்தினை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று (22/10/2021) காலை துவங்கி வைத்து, கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருச்சி மாநகரின் பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடும் பெரியகடைவீதி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 127 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட சீருடை அணியாத காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த வசதியாக 6 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். முககவசம் அணியாமல் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.