மாநகர ஆயுதப்படை மருத்துவமனைக்கு ரூ.1 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்: திருச்சி மாநகர கமிஷனர் அதிரடி நடவடிக்கை: 

0
1

மாநகர ஆயுதப்படை மருத்துவமனைக்கு ரூ.1 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்: திருச்சி மாநகர கமிஷனர் அதிரடி நடவடிக்கை: 

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கார்த்திகேயன் அவ்வபோது அதிரடியாக காவல்நிலையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறை, விமான நிலையம், காவல் சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

2
4

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி கே.கே.நகர் ஆயுதப்படை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாநகர கமிஷனர் அங்கு மருத்துவ பரிசோதனைக்கு எவ்வித வசதியும் இல்லை என்பதை அறிந்தார்.

இதனையடுத்து மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் கே.கே.நகர் காவலர் மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருத்துவ பரிசோதனை மருத்துவமனை உபகரணங்களான ரத்த சர்க்கரை அளவு சோதனை செய்யும் குளுக்கோமீட்டர் கருவி, உயரம் அளக்கும் கருவி, சர்க்கரை அளவு பார்க்கும் கருவி, சிறுநீரில் உப்பு மற்றும் சர்க்கரை பார்க்கும் கருவி ஆகியவற்றை வாங்க உத்தரவிட்டார்.

ரூ. 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நேற்று மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.