திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் கௌரவிப்பு:

0
1

திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் கௌரவிப்பு:

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மாதாந்திர குற்றத் தடுப்பு குறித்த கூட்டம் நேற்று (22.10.2021) போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

2
4

இக்கூட்டத்தில் அரசு மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர்கள், சிறைத்துறை அதிகாரிகள், கூடுதல் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மேலும் காவல்துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள காவல்துறை அதிகாரிகளை அவர்களது குடும்பத்துடன் வரவழைத்து காவல்துறையின் சார்பில் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இதனையடுத்து குற்ற வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், திருட்டு வழக்குகள் ஆகிய குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்த அறிவுரைகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

3

Leave A Reply

Your email address will not be published.