திருச்சியில் குட்கா வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது: 

0
1

திருச்சியில் குட்கா வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது: 

Helios

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் பகுதியில் கடந்த மாதம் 28ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அவ்வழியாக காய்கறிகள் ஏற்றி வந்த மினி லாரியில் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

2

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மைசூரைச் சேர்ந்த சோம சேகர், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருச்சி கம்பரசம்பேட்டையை சேர்ந்த விஜயபாஸ்கர், முத்து ஆகியோருக்கு  இக்குற்ற சம்பவத்தில் தொடர்புடைய தெரியவந்தது.

இதனையடுத்து விஜயபாஸ்கர் மற்றும் முத்துவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்த விசாரணையில் விஜயபாஸ்கர் தொடர்ந்து இதுபோன்ற தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று (22/10/2021) உத்தரவிட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.