விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

0
1

விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் , கடந்த 2020-21- ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் நெல் , மக்காச் சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக நெல் பயிருக்கு 11,305 விவசாயிகளுக்கு ரூ .19.05 கோடி , மக்காச்சோளப் பயிருக்கு 11,938 விவசாயிகளுக்கு ரூ .45.36 கோடி மற்றும் பருத்தி பயிருக்கு 650 விவசாயிகளுக்கு ரூ .1.68 கோடி ஆக மொத்தம் 23,893 விவசாயிகளுக்கு ரூபாய் 66.09 கோடி வழங்கப்பட்டுள்ளது .

2

நடப்பு 2021-22 – ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது . திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல்- II பிர்கா அளவில் மக்காச்சோளம் -II மற்றும் பருத்தி- II பயிர்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் .

4

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் ( குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம் . தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம் . இத்திட்டத்தில் இணைய , முன்மொழி படிவம் . விண்ணப்ப படிவம் பயிர் சாகுபடி அடங்கல் , ஆதார் அட்டை நகல் , வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் , அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசு பொது சேவை மையங்களை அணுகலாம் .

இத்திட்டத்தில் , நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ .337 / – மற்றும் பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ .585.87 / – செலுத்தி பயீர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15 – ஆம் தேதி கடைசி நாளாகும் . மக்கா சோளம் பயிருக்கும் ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ .372.50 / செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாளாகும் .

மேலும் தகவலுக்கு , அந்தந்த வட்டார வேளாண விரிவாக்க மையத்தை அணுகவும் . அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும் .

எனவே , விவசாயிகள் அனைவரும் நடப்பு ஆண்டில் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல் , மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப., தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.