திருச்சியில் குடிபோதையில் வாலிபர் ரகளை: தட்டி கேட்டவர்களுக்கு கத்திக்குத்து: 

0
1

திருச்சியில் குடிபோதையில் வாலிபர் ரகளை: தட்டி கேட்டவர்களுக்கு கத்திக்குத்து: 

Helios

திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (52). இதே பகுதியில் வசித்த ஒருவர் கிருபாகரன் (22). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் கிருபாகரன் ஆபாச வார்த்தைகள் பேசிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

2

இதனையடுத்து ஸ்டாலின் மற்றும் அவரது மகன் இது குறித்து கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கிருபாகரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை மற்றும் மகனை குத்திவிட்டு தப்பி ஓடினார்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நேற்று (22.10.2021) கிருபாகரனை கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.