திருச்சி அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் பலி:

0
1

திருச்சி அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் பலி:

மணப்பாறை சேதுரத்தினபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (31). இவர் நேற்று (22.10.2021) இரவு மணப்பாறை நோக்கி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

2
4

அச்சமயத்தில் அவ்வழியாக மணப்பாறையிலிருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்து தினேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.