இலவச தையல், தட்டச்சு, கணினி பயிற்சி பெற விருப்பமா..?

0
1

இலவச தையல், தட்டச்சு, கணினி பயிற்சி பெற விருப்பமா..?

குடும்ப வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்பிலேயே பள்ளி படிப்பை நிறுத்த வேண்டிய சூழலுக்கு ஆளானவர், வறுமையைக் காரணம் காட்டி படிப்பை நிறுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு படிப்பைத் தொடர்ந்த ராமச்சந்திரன் கையில் இன்று 9 முதுகலை பட்டம், 4 முதுகலை டிப்ளமோ பட்டம், 2 எம்.பில் பட்டம். அத்துடன் தமிழக முன்னாள் ஆளுநர் மூலம் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

வழக்கறிஞர் ராமச்சந்திரன்
வழக்கறிஞர் ராமச்சந்திரன்
2

திருச்சி நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராகவும், சமூக சேவகராகவும் பணிபுரிந்து வரும் வழக்கறிஞர் ராமச் சந்திரன், சிறு வயதில் படிக்க முடியாமல் தான் அனுபவித்த துயரத்தை பிறர் படக்கூடாது என்ற நோக்கில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமான உதவிகளை செய்ய 2001-ல் PEARL (People education awareness for rural libration Trust) என்னும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். கிராம மக்களின் விடுதலைக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளை என்பதே இதன் அர்த்தமாகும்.


21 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளை குறித்து வழக்கறிஞர் ராமச்சந்திரன் நம்மிடம் கூறுகையில், “இந்த அறக்கட்டளை மூலம் குறைந்த அளவிலான வருமானம் அல்லது வருமானம் இல்லாத குடும்பத் தினர் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் கிடைக்காமல் ஒதுக்கப்பட்ட நகரின் புறந்தள்ளப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கும் உதவி செய்யும் நோக்கில், அறக்கட்டளை பெயரில் ‘கிராமம்’ என சேர்த்தோம். அதாவது கிராமப்புற மக்களுக்கு மட்டுமல்லாமல் கஷ்டப்படும் அனைவருக்கும் உதவும் நோக்கில் செயல்படுகிறோம்.

வீடியோ லிங்:

அறக்கட்டளையின் சார்பாக வருடத்திற்கு 10,000 நோட்டு புத்தகங்கள் மற்றும் 1000 மாணவர்களுக்கு பள்ளி சீருடையும் வழங்கி வருகிறோம். திருச்சியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சீருடை வழங்கி வருகிறோம். கல்விக்கான உதவி மட்டுமல்லாது சட்ட விழிப்புணர்வு முகாம், மனித விழிப்புணர்வு முகாம், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு உதவும் நோக்கில் சமூக நலத்துறையில் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தி வருகிறோம்.


மேலும் எனது அலுவலகத்தில் உள்ள நசீராபானு, சூர்யா, சந்தியா, செல்வராஜ் ஆகிய வழக்கறிஞர்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு தேவையான அடிப்படை சட்ட அறிவு மற்றும் அரசாங்கம் தரும் திட்டங்களை பெறும் வழிமுறைகள், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு இவற்றை ஏற்படுத்தித்தரும் வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து பெரும் பான்மையானோர் பாதிக்கப்பட்டனர். அச்சமயத்தில் சுயசார்பு பொருளாதாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கில் இலவச தையல் பயிற்சி, தட்டச்சு பயிற்சி, கணினி பயிற்சி ஆகியவற்றை PEARL பயிற்சி மையம் மூலம் தொடங்கினோம். திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த 1 வருடமாக PEARL அறக்கட்டளையின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

வீடியோ லிங்:

இங்கு 90 நாட்கள் மூன்று பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தின் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் சுயதொழில் புரிவோராக உயர்ந்துள்ளனர். தற்போது இந்த பயிற்சி மையத்தில் மூலம் ஒரு நாளைக்கு 80க்கும் மேற்பட்டோர் பயன்பெறுகிறார்கள். மேலும் இப்பயிற்சி நிறுவனத்தில் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரமும் வழங்கி வருகிறோம்” என்றார்.

PEARL அறக்கட்டளையின் பயிற்சி மையத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு தேர்வு கட்டணம் ஏதுமில்லை. தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு படித்தவராகவும், தட்டச்சு பயிற்சிக்கு பத்தாம் வகுப்பும் கணினி பயிற்சிக்கு 12ஆம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும். பயிற்சி பெற விரும்புவோர் 94886 83399, 94899 04575 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.