திருச்சியில் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை: 

0
1

திருச்சியில் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை: 

Helios

திருச்சி கே.கே.நகர் உடையாப்பட்டி பேருந்து நிலையம் அருகே பிள்ளையார் மற்றும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வெளிப்பகுதியில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

2

இந்நிலையில் வழக்கம்போல் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நேற்று (21.10.2021) கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட  மர்மநபரை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.