திருச்சியில் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கடைகளில் தள்ளுபடி சலுகை:

0
1

திருச்சியில் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கடைகளில் தள்ளுபடி சலுகை:

திருச்சியில் நாளை (23/10/2021) 6 வது சுற்று மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது . திருச்சி மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது .

இதுகுறித்து கோ.அபிஷேகபுரம் கோட்ட உதவி கமிஷனர் செல்வம் பாலாஜி கூறியுள்ளதாவது:

2

கோஅபிஷேகபுரம் கோட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் நாளை நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அனைவருக்கும் கடைகளில் 5 சதவீத தள்ளுபடி சலுகையுடன் பொருள்கள் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

ஆகையால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்துவதோடு சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.