திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்

0
1

திருச்சி தென்னூர் புதுமாரியம்மன் கோவில் தெருவை  சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மலர்விழி மீரா இவருடைய உறவினர் (அண்ணன் உறவுமுறை) பாலமுரளி கார்த்திக்.

பாலமுரளி கார்த்திக், மலர்விழி மீராவுடன் பழகி வந்தார். இதுபற்றி அறிந்த மீராவின் தாய் அவரை கண்டித்ததால் மீரா அவரிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுரளி கார்த்திக் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி மாலை மீரா கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய நேரத்தில் அவரை(மீராவை) சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

2
4

வாலிபருக்கு தண்டனை

இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுரளி கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் நீதிபதி தங்கவேலு (21.10.2021)  நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட பாலமுரளி கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் , அபராத தொகையும், கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்ததுடன்,  அபராத தொகையை கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய் செல்வியிடம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.