முனைவர் ஜோ. சலோவின் 31வது நூல் வெளியீட்டு விழா :

0
1

முனைவர் ஜோ. சலோவின் 31வது நூல் வெளியீட்டு விழா :

திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜா‌.சலேத். ஜோ.சலோ என்னும் புனைப்பெயரில் இயங்கிவரும் இவர் இளையோரை ஆற்றுப்படுத்தும் விதமாக இதுவரை முப்பது நூல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதியுள்ள இலக்கே உனது கிழக்கு என்னும் புதிய நூலை திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

2

பள்ளித் தலைமையாசிரியர் அருள்தந்தை செ.ஜோசப் கென்னடி தலைமை வகித்து நூலை வெளியிட்டார். முதுதமிழ் எழிலரசி திருமதி கேத்தரின் ஆரோக்கியசாமி மற்றும் தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி ஆகிய இருவரும் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர்.

பள்ளித்தாளாளர் அருள்தந்தை ஜெயராஜ் இலங்கேஸ்வரன், பிசினஸ் திருச்சி ஆசிரியர் ஜெ.டி.ஆர்., ஆசிரியர் எட்வின் அலெக்சாண்டர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆல்வின் ஜோஸ், அருண் பிரகாஷ், கவிஞர் தன்ராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முன்னதாக ஆசிரியர் ஜான்சன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் எழுத்தாளர் முனைவர் ஜோ.சலோ ஏற்புரையாற்றினார்.

3

Leave A Reply

Your email address will not be published.