மோசடி செய்ய முயன்றவரை மடக்கிப்பிடித்த சைபர் க்ரைம்

0
1

திருச்சி-தஞ்சை ரோடு வரகனேரி பஜார் பகுதியைச் சேர்ந்த பாஷாவின் மகள் பெனாசிர் பாத்திமா. அவரது கணவர் கடந்த ஜூன் மாதம் இறந்தார். அதனால். தனது மகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் பாஷாவின் வீட்டிற்கு வந்த தேவபிரசாத்  என்பவர், தான் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதாக கூறி, உங்களுக்கு அரசின் உதவித்தொகை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் கல்வித்துறையில் வேலை வழங்கப்படும் என்றார். பின்னர் பாஷாவின் மகளுக்கு போன் செய்து தனது வங்கிக் கணக்கில் ரூ.30 ஆயிரம் செலுத்தும்படி கூறினார்.

அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பாஷா, இதுகுறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து, பாஷாவிடம் பண மோசடி செய்ய முயன்ற, சேலம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபரை கைது செய்தார்.

2

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.

3

Leave A Reply

Your email address will not be published.