திருச்சியில் செல்போன் திருடர்கள் கைது

0
1

திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா அருகே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜப்ரீன் சுரான், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் இருவரும் சென்று கொண்டிருந்தபோது திருடர் இருவர் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.

Helios

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் ரோந்து போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் இருவரையும் மடக்கி பிடித்தனர்.

2

அதுபோல அரிஸ்டோ ரவுண்டானா அருகில் சில இளைஞர்கள் ஒருவரிடம் இருந்து செல்போனை கத்தி முனையில் பறித்த புகாரின் பேரிலும் அவர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார்.

அந்த வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராம்ஜிநகர் கள்ளிக்குடியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் , காந்தி காலனியை சேர்ந்த ஜெகதீஷ், மோகன்ராஜ் என்று தெரியவந்தது.  கைது செய்யப்பட்ட  5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.