இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

0
1

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

Helios

கோயம்புத்தூர் பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சுயநிதிப் பிரிவுத் தமிழ்த்துறை சந்திரகாந்தம் தமிழ் மன்றம் சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இளங்கலை மாணவி தஸ்னீம் பிர்தோஸின் இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கோ.சுகன்யா வரவேற்புரையாற்றினார்.

திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காலம் போற்றும் கலாம் என்னும் மையப்பொருளில் உரையாற்றினார்.

2

விழா நிறைவில், ஏவுகணை நாயகன், கனவுகளின் காதலன் உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளுக்கான முடிவுகளை சிறப்பு விருந்தினர் அறிவித்தார்.

இளங்கலை இலக்கிய மாணவி ம.சாலினி நன்றியுரையாற்றினார்.

சந்திரகாந்தம் தமிழ் மன்ற துணைச்செயலாளர்‌மாணவி நர்மதா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர் ஜெ.கவிதா உள்ளிட்ட தமிழ்த்துறைத் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட 274 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.