திருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி

0
1

திருச்சியைச் சோ்ந்த  கட்டடப் பொறியாளர் பிரபாகா், கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை ஆவடி 50 அடி சாலை, திருமலை நகரைச் சோ்ந்த சுரேஷ்பால் என்ற தொழிலதிபரிடம், திருவள்ளூர் மாவட்டத்தில்  மார்க்கெட் பகுதியில் 12, 674 சதுரடி நிலத்தை கிரயம் செய்ய பிரபாகா் ஒப்பந்தம் செய்து, ரூ.18 லட்சத்தை முன்பணமாகப் கொடுத்துள்ளார்.

Helios
2

ஆனால் சுரேஷ்பால் அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லை. கேட்டபோது, சுரேஷ்பால் அந்த நிலத்தின் மீது கடன் வாங்கியிருந்தது தெரியவர, அதிர்ச்சியடைந்த பிரபாகா், அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார்.  2 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் பணம் வரவில்லை.இதனால் பிரபாகா் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஆய்வாளா் கோசலைராமன் தலைமையிலான போலீஸார், சுரேஷ்பால் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

3

Leave A Reply

Your email address will not be published.