திருச்சி தூய வளனார் கல்லூரியில் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரியில் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா

திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் மொழிபெயர்ப்புக் கலை என்னும் மதிப்புக் கூட்டுப் பாடத்திற்கான சான்றிதழ் வகுப்புத் தொடக்கவிழா நடைபெற்றது.

2

இவ்விழாவிற்குத் தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி தலைமை வகித்தார்.

கல்லூரித் துணை முதல்வர் முனைவா் கு.அலெக்ஸ் சிறப்புரையாற்றி பயிற்சியைத் தொடங்கி வைத்தார். தம் சிறப்புரையில் வாசிப்புப் பழக்கமும், மொழி பெயர்ப்புக் கலையும் இளைய தலைமுறையினருக்கு மிக மிக அவசியமானது என எடுத்துக்கூறி, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

4

முன்னதாகப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தமிழாய்வுத்துறைப் பேராசிரியா் முனைவா் ஜா.பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் வரவேற்புரையாற்றினார்.

இறுதியில் முனைவர் ஜா.சலேத் நன்றியுரையாற்றினார்.

நிகழ்வினை முனைவர் பட்ட ஆய்வாளர் அ.ஞா‌.உமா மகேஸ்வரி நெறியாள்கை செய்தார்.

பேராசிரியா்கள், இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கிய மாணவா்கள் உள்பட 60 பேர் இத்தொடக்க விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனா்.

3

Leave A Reply

Your email address will not be published.