திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய முதியவர் உட்பட 2 பேர் கைது:

0
1

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய முதியவர் உட்பட 2 பேர் கைது:

Helios

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

2

அப்போது அவ்வழியாக வந்த கோவை மாவட்ட பதிவு எண் கொண்ட காரை போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 18 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் ரேஷன் அரிசியை கோழித் தீவனத்திற்காகவும், மாவு தயாரிக்கவும் கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து காரில் வந்த திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அக்பர் (61), திருச்சி இபி சாலையைச் சேர்ந்த சுரேஷ் (32) ஆகிய 2 .பேரை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.