எரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை!

0
1

திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8-வது வார்டு சஞ்சீவி நகர், மதுர கார்டன் பகுதியில் மின்விளக்கு சரியாக எரியவில்லை என்று மக்கள் கூறிவந்தனர், மேலும் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் சாலைகளில் செய்வதற்கு அஞ்சுவதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறிவந்தனர்.

4


இதுகுறித்த தகவல் தசரதன் என்பவர் மூலமாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரு விளக்கு அமைத்து தர வலியுறுத்தினார். இதனடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மின் விளக்குகளை அமைத்து தந்து இருக்கின்றனர்.

2


இதையடுத்து சஞ்சீவி நகர் மதுர கார்டன் பகுதியைச் சேர்ந்த மக்கள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் – க்கு நன்றி தெரிவித்தனர். மேலும் எம்எல்ஏ மக்களின் குறைகளை கேட்டு அறிவதோடு மட்டுமல்லாமல் உடனுக்குடன் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பது முன்னுதாரணமான நடவடிக்கையாக இருப்பதாக மக்கள் கூறினர்.

3

Leave A Reply

Your email address will not be published.