தீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க வியாபாரிகளுக்கு அழைப்பு:

0
1

தீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க வியாபாரிகளுக்கு அழைப்பு:

Helios

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தர கடைகள் அமைக்க வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: திருச்சி டவுன் ஹாலில் அ- பகுதியில் 80 சதுர அடி கொண்ட 37 தரைக்கடைகளும் , ஆ- பகுதியில் 80 சதுர அடி கொண்ட 19 தரைக்கடைகளும் , இ- பகுதியில் 80 சதுர அடி கொண்ட 24 தரைக்கடைகளும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது .

2

கடை ஒவ்வொன்றும் அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபா வளி பண்டிகை முடிவுறும் வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும் . அ – பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணமாக ரூ .6,500 செலுத்த வேண்டும் . ஆ- பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு ரூ .5,500 , இ- பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு ரூ .4,500 அனுமதிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

தரைக்கடைகள் அமைக்கவிரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு , அதற்கான கட்டணத் தொகையை கோட்டாட்சியர் , வருவாய்க் திருச்சி என்ற பெயரில் வங்கிக் கேட்பு காசோலையாக எடுத்து , விண்ணப்பத்துடன் இணைத்து கோட்டாட்சியரிடம் வரும் 25 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வழங்க வேண்டும் .

தரைக்கடைகள் எண்ணிக் கையைவிட மனு செய்தவர்க ளின் எண்ணிக்கை அதிக மாக இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . குலுக்கல் நகர வர்த்தகக் குழு அமைக்க பிரதிநிதிகள் , மாவட்ட உப யோகிப்பாளர் சங்கப் பிரதிநி திகள் மற்றும் நகர முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சி வருவாய் கோட்டாட் சியர் முன்னிலையில் வருகிற 27 – ந் தேதி காலை 11 மணிக்கு நடத்தப்படும் எனக் கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.