திருச்சியில் கோ – ஆப்டெக்ஸ்  தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்:

0
1

திருச்சியில் கோ – ஆப்டெக்ஸ்  தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்:

Helios

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ – ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப. , அவர்கள் நேற்று (18.10.2021 ) குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் கூறியதாவது: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ- ஆப்டெக்ஸ் 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது .

2

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ – ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன . கோ – ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் , ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 % சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது .

இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள் , காஞ்சிபுரம் , ஆரணி , தஞ்சை போன்ற பகுதிகளில் செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள் , திருபுவனம் பட்டு சேலைகள் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் உருவான பருத்தி சேலைகள் . போர்வைகள் , படுக்கை விரிப்புகள் , தலையணை உறைகள் , வேட்டி , லுங்கி , துண்டு இரகங்கள் , பருத்தி சட்டைகள் , திரைச்சீலைகள் , கால் மிதியடிகள் , நைட்டிஸ் , மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன .

கைவண்ணத்தில் கடந்த தீபாவளி 2020 பண்டிகை காலத்தில் கோ – ஆப்டெக்ஸின் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ .738.50 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது . தற்போது தீபாவளி 2021 க்கு ரூ .2000 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது . திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020 ல் ரூ.174.26 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது . தற்போது தீபாவளி 2021 க்கு ரூ .350.00 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது . மேலும் , கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் , கனவு செயல்படுத்தி வருகிறது . இதன்படி 10 மாத சந்தா 11 ஆவது மற்றும் 12 ஆவது மாத சந்தா தொகையை தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 % அரசு தெரிவித்தார் . நனவு திட்டம் ” என்ற சேமிப்புத் திட்டத்தினை தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, கோ – ஆப்டெக்ஸ் செலுத்தி , மொத்த முதிர்வுத் தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

இவ்விழாவில் கோ – ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி , முதுநிலை மேலாளர் ( வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா.சீனிவாசன் , திருச்சி பொதிகை கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் அ.சங்கர் , அரசு அலுவலர்கள் , வாடிக்கையாளர்கள் , பொதுமக்கள் மற்றும் கோ – ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர் .

3

Leave A Reply

Your email address will not be published.