திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி: 

0
1

திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி: 

Helios

திருச்சி அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சார்பில் நேற்று (18.10.2021) தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

2

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் கலந்து கொண்டனர். எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் எப்படி கையாளுவது, மற்றும் அவசர காலத்தில் நோயாளிகளை பத்திரமாக மீட்பது குறித்து விழிப்புணர்வை தீயணைப்பு வீரர்கள் தத்துரூபமாக செய்து காட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அனுசுயா, உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன் , நிலைய அலுவலர் மெல்கியூராஜா கலந்து கொண்டு பல்வேறு பயிற்சிகளையும் , ஆலோசனைகளையும் வழங்கினர் மருத்துவமனை டீன் வனிதா , கண்காணிப்பாளர் டாக்டர் அருண் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

3

Leave A Reply

Your email address will not be published.