திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் பைக் மோதி முதியவர் பலி:

0
1

திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் பைக் மோதி முதியவர் பலி:

Helios

புதுக்கோட்டை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த நந்தையா (82). இவர் தனது மனைவியுடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த போது, சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

2

அச்சமயம் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.