திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 6வது நாளாகத் தொடரும் போராட்டம்:

0
1

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 6வது நாளாகத் தொடரும் போராட்டம்:

Helios

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 6-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2

இப்போராட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபம் பெற வேண்டும், மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் நேற்று(17.10.2021) திருச்சி அண்ணாமலை நகரில் விவசாயிகள் பாடைகட்டி ஒருவர் இறந்தது போல ஒப்பாரி வைத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.