திருச்சியில் 3  நாட்களாக சுயநினைவின்றி கிடந்த முதியவர் மீட்பு: மரித்து விட்டதா மனிதநேயம்

0
1

திருச்சியில் 3  நாட்களாக சுயநினைவின்றி கிடந்த முதியவர் மீட்பு: மரித்து விட்டதா மனிதநேயம்

Helios

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடம் அருகில் 3 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் சுயநினைவு இன்றி மயங்கி கிடக்கிறார்.

2

மாநகராட்சியில் சொல்லியும் பயன் இல்லை! 108 ஆம்புலன்ஸ்க்கு சொல்லியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மாட்டோம் என்று கைவிரித்து விட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், கலை அமைப்பு மாவட்ட செயலாளரும் தண்ணீர் அமைப்பு நிர்வாகிருமான செல்வம்,  ஸ்ரீ ஃபவுண்டேஷனின் மீட்பு குழு சென்று பார்வையிட்டு சளி மற்றும் வாந்தி எடுத்து மிகுந்த துர்நாற்றத்துடன் அதன் மீதே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த முதியவரை ஸ்ரீ ஃபவுண்டேஷனின் மீட்பு குழு எவ்வித சங்கடமும் படாமல் அவரை காவல்துறை உதவியோடு மீட்டு உடலை சுத்தம் செய்து புத்தாடை மாற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.