திருச்சி அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல்: ஒருவர் பலி: 9 பேர் படுகாயம்:

0
1

திருச்சி அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல்: ஒருவர் பலி: 9 பேர் படுகாயம்:

Helios

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று முன்தினம் (14/10/2021) சென்று கொண்டிருந்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மாணிக்கம் பிள்ளை சத்திரம் பகுதியில் வந்தபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி மறுபக்கம் சாலையில் எதிரே வந்த அரசு விரைவு பேருந்து மீது மோதியது.

2

இதில் திருவண்ணாமலை பகுதி சேர்ந்த லாரியை ஓட்டி வந்த முருகன் 40 என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

மேலும் பஸ் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம் , கருங்குளத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (56), கண்டக்டர் கடலூர் மாவட்டம் , பெருந்துறையை சேர்ந்த மாயாவி ( 35 ) மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னை (அம்பத்தூரை சேர்ந்த சதீஷ்கு மார் (35) , அவரது மனைவி பானு ( 28 ) , பெரியகுளத்தைச் சேர்ந்த மருதுபாண்டி ( 23 ) , தேனி மாவட்டம் , கரட்டுப்பட்டியைச் சேர்ந்த சுதா ராணி ( 35 ) , இவரது மகள் தங்க மணி ( 7 ) , பெரியகுளம் ராணி ( 55 ) ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

3

Leave A Reply

Your email address will not be published.