திருச்சியில் அடுக்குமாடி மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்:

0
1

திருச்சியில் அடுக்குமாடி மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்:

Helios

திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 22 வீடுகளில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்து யாராலும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

2

இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். மேலும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரங்கநாயகி 74 என்ற பெண் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மக்கள் நுழைய தடை மிதித்து கதவை சங்கிலியால் பூட்டு போட்டு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

3

Leave A Reply

Your email address will not be published.