பண்ணை மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் பெண் விவசாயிகளுக்கு கெளரவிப்பு

0
1

 பண்ணை மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் பெண் விவசாயிகளுக்கு கெளரவிப்பு

Helios

பெண் விவசாயிகளை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி பண்ணை மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (15.10.2021) திருச்சி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பண்ணை மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

2

இந்நிகழ்ச்சியில் இணை பேராசிரியர் டாக்டர் கீதா வரவேற்புரையாற்றினார் மற்றும் உதவிப் பேராசிரியர் தனுஷ்கோடி, அலெக்ஸ் ஆல்பர்ட், ரித்திகா ஆகியோர் உரையாற்றினர்.

மேலும்,  இந்நிகழ்வில் ஏராளமான பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது விவசாயத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள  தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் கழிவு பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் சாதனை படைத்த 5  பெண் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.