திருச்சியில் குடும்ப தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது:

0
1

திருச்சியில் குடும்ப தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது:

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம் (50), கூலித் தொழிலாளி இவரது தம்பியான வெங்கடேசன் ( 45 ).

2
4

இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டனர். இந்த தகராறில் கார்மேகம் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (15/09/2021) கார்மேகம் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தம்பி வெங்கடேசனை கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.