கொள்ளிடம் தடுப்பணை பற்றி தெரிந்துகொள்வோமா?

0
1

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் நாமக்கல், கரூர் மாவட்டம் வழியாக திருச்சி முக்கொம்பு மேலணையை அடைகிறது.

முக்கொம்பு மேலணையில் இருந்துதான் காவிரி, கொள்ளிடம் என 2 ஆறுகள் பிரிகிறது. இதில் காவிரி ஆறு கல்லணை நோக்கி பாய்ந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு உதவுகிறது.

2

நாட்டிலேயே முதல் முறையாக கொள்ளிடம் புதிய தடுப்பணையின் தெற்குப் பகுதியில் 626 மீட்டர் நீளத்திற்கு45 ஷட்டர்கள், வடக்குப் பகுதியில் 138 மீட்டர் நீளத்திற்கு 10 ஷட்டர்கள் என மொத்தம் 55 ஹைட்ராலிக் வெர்டிக்கல் ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, பைல் பவுன்டேஷன் தொழில்நுட்பமுறையில் 60 அடி ஆழத்தில் 484 தூண்களுடன்,. 6 அடி ஆழத்துக்கு பாறையை குடைந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரும்பு, கம்பிகள் ஆகியவை துருப்பிடிக்காத வகையில் `எபோக்சி பூச்சு’ பயன்படுத்தப்பட்டுள்ளது.

4

இதுவரை இல்லாத வகையில் கதவணையின் ஷட்டர்கள் (மதகுகள்) இயக்க நீரியல் இயக்கிகள் என்னும் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறே ஷட்டர்களை இயக்க முடியும்.

கதவணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. இதனால்
உபரிநீர் மட்டுமே செல்லும். காவிரியில் வெள்ளம் வரும் நேரத்தில், உபரிநீரை திறந்து விடவே கொள்ளிடம் தடுப்பணை பயன்பட்டு வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரால் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள புள்ளம்பாடி பெருவளை மற்றும் அய்யன் வாய்க்கால்கள் வாயிலாக சுமார் 57 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் கொள்ளிடம் ஆற்று நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையையும் பூர்த்தியாகிறது.

இறுதியில் கொள்ளிடம் நீரானது நாகை மாவட்டத்தில் கடலில் கலக்கிறது

3

Leave A Reply

Your email address will not be published.