திருச்சி முக்கொம்பு மேலணையில் புதிய தடுப்பணை-ஜனவரியில் திறப்பு

0
1

திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் 92 சதவீதம் முடிந்து விட்டது. வருகிற ஜனவரி மாதம்  பயன்பாட்டுக்கு வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி இரவு முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் தடுப்பணையில் 9 ஷட்டர்கள் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தன. முதற்கட்டமாக தற்காலிக தடுப்பணை கட்டப்பட்டது. பின்னர் ரூ.387 கோடியே 60 லட்சம் செலவில் புதிய தடுப்பணை பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வந்தது. இப்பணிகள் கடந்த மார்ச் மாதம் நிறைவடையும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.  

2
4

கொரோனா தொற்று கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது பணிகள் முடுக்கி விடப்பட்டு 92% முடிவடைந்த நிலையில் பாலத்தின் மீது சாலைப்பணிகள் உள்ளிட்ட இதர பணிகள் மட்டும் இருப்பதாகவும், அந்த பணியும் வருகிற நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் டிசம்பருக்குள் முடிந்து விடும் என்றும், வருகிற ஜனவரி (2022) மாதம் கொள்ளிடம் தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஜனவரி மாதம் நடக்கும், கொள்ளிடம் தடுப்பணை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் நேரில் பங்கேற்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

3

Leave A Reply

Your email address will not be published.