திருச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்களிடம் நகை பறித்தவருக்கு சிறை

0
1

திருச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்களிடம் நகை பறித்தவருக்கு சிறை தண்டனை.

கடந்த 2014-ல் திருச்சி உறையூர் நாச்சியார் பாளையத்தில் உள்ள காமராஜர் கல்வி கூடத்தில் பயிற்றுனராக பணி செய்து வந்த காயத்ரி, தூயமலர் மார்டினா  இருவரின் நகைகளை, (சுமார் 5 பவுன்)  கே.கே.நகர் சம்கோ மீட்டர் ரோட்டை சேர்ந்த லியோ கத்தியை காட்டி மிரட்டி பறித்ததுடன், அவர்கள் இருவரையும் குளியல் அறையில் வைத்து பூட்டிச்சென்றார்.

குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில், தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி சாந்தியிடம், அரசு தரப்பில் 6 சாட்சிகள், 7 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, லியோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. நேற்று இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது. நீதிபதி சாந்தி ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை  எனவும் தீர்ப்பு கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.