திருச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

0
1

திருச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Helios

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் 90வது பிறந்த நாள் முன்னிட்டு செந்தண்ணீர்புரம் பகுதியில் (15.10. 21) காலை 10.30 மணியளவில் மரக்கன்று வழங்குதல் மற்றும் மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தவருக்கு பாராட்டு விழா.

மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் முன்னிலையில் நடந்தது.

2

“பாதையெங்கும் மரம்” என்ற நோக்கத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில துணை செயலாளர் வெ.இரா.சந்திரசேகர் செந்தண்ணீர்புரம் ஆரம்பத்திலிருந்து முத்துமணிடவுன் பஸ் போகும் பகுதியில் மரங்களை நட்டு வளர்த்து உள்ளார். இவருக்கு உதவியாக நட்ட மரக்கன்று அருகில் உள்ள பெண்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்து இருக்கிறார்கள். இப்படி மரம் வளர்த்தவருக்கு ஊக்கப்படுத்தும் வகையில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டி , ஊக்கத்தொகை, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் மரக்கன்று வழங்க்ப்பட்டது.

நிகழ்வுவில் “மரம் நடுவீர், நட்ட மரத்தைப் பாதுகாப்பீர்” என உறுதி எடுத்தப்பட்டது.

மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் வெங்கடேஷ், தயானந்த், சங்கீதா , அனந்தகுமார் ,முத்தம்மா , மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்

3

Leave A Reply

Your email address will not be published.