திருச்சியில் சிலம்ப வீரர்களின் ஆயுதபூஜை கொண்டாட்டம்

திருச்சியில் சிலம்ப வீரர்களின் ஆயுதபூஜை கொண்டாட்டம்
பொன்மலை பகுதியில் இன்று (14/10/2021) ஆயுத பூஜை விழா கொண்டாடபட்டது. சாமி தற்காப்பு கலைக்கூடம் சார்பாக விளையாட்டு வீரர், வீரங்கனைகள் குடும்பத்தினர்கள் கலந்துக் கொண்டு சிலம்பம் விளையாடி உற்சாகமாக கொண்டாட்டப்பட்டது.

ஆயுத பூஜையை முன்னிட்டு சிலம்பத்திற்கு உள்ள சாமான்கள் மற்றும் பொருள்களை கொண்டு பூ, பொரி, பொட்டுக் கடலை சுண்டல், வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
சாமி தற்காப்பு கலைக்கூடம் வைத்தியார் டி.ஜீவானந்தம், மக்கள் சக்தி இயக்கம் பொருளாளர் கே.சி. நீலமேகம், மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
