திருச்சி அருகே ஏடிஎம்மில் தவறுதலாக வந்த பணம்: வங்கியில் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்

0
1

திருச்சி அருகே ஏடிஎம்மில் தவறுதலாக வந்த பணம்: வங்கியில் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்

துறையூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (36). இவர் தனியார் ஆம்புலன்ஸில் உரிமையாளர். இவர் நேற்று (12.10.2021)  காலை பெரம்பலூர் ரோட்டில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

2

இந்நிலையில் நடராஜன் பணம் எடுக்க முயற்சிக்க முன்பே ரூ.2000 பணம் ஏடிஎம்-ல் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்ட நடராஜ் தனக்கு முன்பு பணம் எடுக்க வந்த பெண்ணை வெளியே சென்று தேடி பார்த்துள்ளார். அந்த பெண் கிடைக்காததால் அருகிலிருந்த கடையில் விவரத்தைக் கூறி தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து சென்றுள்ளார்.

4

மாலை வரை தன்னை யாரும் தொடர்பு கொள்ளாததால் திருச்சி ரோட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளைக்கு சென்று நடந்ததைக் கூறி ரூ.2000 பணத்தை வங்கி நிர்வாகங்களிடம் ஒப்படைத்தார். மேலும் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைப்பதாக வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ரூ.2000 பணத்தை உரியவரிடம் சேர்ப்பதற்காக நடராஜன் செய்த முயற்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

3

Leave A Reply

Your email address will not be published.