திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மூடல்: கலெக்டர் அதிரடி

0
1

திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மூடல்: கலெக்டர் அதிரடி

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரித்துறை ரோட்டில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்துவார்களால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்தன. இந்த மதுபான கடையை மூடக்கோரி பொதுமக்களால் பல்வேறு போராட்டம்  நடத்தப்பட்டது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று (11/10/2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சிவக்குமார் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுடன் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி கிழக்கு தாசில்தார் சேக் முஜீப், போலீஸ் உதவி கமிஷனர், உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மதுபான கடையை அப்புறப்படுத்தக் குறித்து 4 முறை உறுதி அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை ஆகையால் கடையை நிரந்தரமாக மூடூவதாக தெரிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடப்படும் என கூறினர்.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தால் கடையை மூடி விடுங்கள் என கலெக்டர் கூறினார். இதுகுறித்து தாசில்தார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இங்கு டாஸ்மாக் கடை இனி செயல்படாது இது தொடர்பாக கலெக்டர் ஆணை பிறப்பிப்பார் என கூறினார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போராட்டத்திற்கு பலன் கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

3

Leave A Reply

Your email address will not be published.