திருச்சியில் காவலர்களுக்கு மாநகர கமிஷனர் எச்சரிக்கை:

0
1

திருச்சியில் காவலர்களுக்கு மாநகர கமிஷனர் எச்சரிக்கை:

திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் காவல் நிலையங்கள், காவல் சோதனைச் சாவடிகள், விமான நிலையம் காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

2

இந்நிலையில் மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்,இருசக்கர வாகனங்களில் வருவோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து வரவேண்டும். மேலும் இவற்றை கடை பிடிக்காதவர்கள் காவலர்கள் மற்றும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், திருச்சி மாநகரில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை, கூடுதல் விலைக்கு மது விற்றல் ஆகிவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிக்குப்பழியாக நடத்தப்படும் கொலை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி சி.எஸ்.ஆர் பதிவு செய்து கொடுக்க வேண்டும். மனுக்கள் மீது அலட்சியம் காட்டக்கூடாது என்பது போன்ற பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.