10 ஆண்டு மருத்துவ சேவையில் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை

0
1

10 ஆண்டு மருத்துவ சேவையில் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை

சமூக அக்கறையுடன் நமது சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் நிறுவப்பட்ட மருத்துவமனை 10 ஆண்டுகள் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.பல ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வழித்த மருத்துவமனை இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து அவர்களை குணப்படுத்தியுள்ளனர்.

வெளிநோயாளிகள் 2 லட்சம் பேர் வந்துள்ளனர். உள்நோயாளிகள் 70 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பியுள்ளனர். இவை அனைத்திற்கும் காரணம் திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவ நிபுணர்கள் குழுவாக செயல்படும் முறை. மேலும் சிறப்பு துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் கொண்டு சிகிச்சை அளிப்பது ஆகும்.

2

நோயாளிகள் விரைவாக குணமடைய செவிலியர்கள் பங்கு அளவிட முடியாது. அவர்களுக்கு தேவையான போது மருந்து கொடுப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது, குடும்பத்தில் ஒருவராக பாவிப்பது, ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே கண்டுபிடிப்பது.தரமான அதி நவீன உபகரணங்கள் உள்ளதால் எளிதாகவும், விரைவாகவும் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் டயாலிசிஸ் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பலர் பயனடைந்து வருகின்றனர்.  இம்மருத்துவமனை NABH தர சான்றிதழ் பெற்றுள்ளது மற்றும் அனைத்து இன்சூரன்ஸ் வசதிகள் உள்ளது.   லேப்ராஸ்கோப்பி முறையில் பொது அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம் ஆகியவற்றில் எண்ணற்ற நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா காலத்தில் எங்கள் மருத்துவமனை எப்பொழுதும் செயல்படுவது போல் செயல்பட்டு எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி உள்ளது என இம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.