மத்திய மாநில அரசு விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் நடத்தப்படும் விக்ரமராஜா பேட்டி:

0
1

மத்திய மாநில அரசு விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் நடத்தப்படும் விக்ரமராஜா பேட்டி:

திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தொடக்க விழா திருச்சியில் உள்ள பழைய பால்பண்ணை வெங்காய மண்டி அரங்கத்தில் நேற்று (10.10.2021) நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா, மாநில பொது செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

4
2

கல்வி நகை அடகு பிடிக்கும் தொழில் செய்வோருக்கு உரிமம் புதுப்பித்தல் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும், பொய் குற்றச்சாட்டின் பேரில் நகை அடகு தொழில் செய்வோரை அச்சுறுத்தும் காவல்துறையினர் அவற்றை கைவிட வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:

இனி தொடர்ந்து பண்டிகை காலங்கள் வருவதால் முழு தளர்வுடன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மேலும் மத்திய மாநில அரசு விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த குறித்த நல்ல முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.