திருச்சி தூய வளனார் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் அருள்முனைவர் மேத்யூ ஜே. மூலேல், சே.ச., அருள்தந்தை சி.கே.சுவாமி, சே.ச., அருள்தந்தை ச.இராசநாயகம், சே.ச., அருள்முனைவா் மணி வளன், சே.ச. மற்றும் அருள்முனைவா் ச.இலாசர், சே.ச. ஆகியோரின் அறக்கட்டறைச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

இயங்கலையில் நடைபெற்ற இந்நிகழ்விற்குத் தூய வளனார் கல்லூரி பணிமுறை இரண்டின் இணைமுதல்வா் முனைவா் வி.அலெக்ஸ் ரமணி தலைமை வகித்தார்.

2

தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ஆ.மரிய தனபால் வரவேற்புரையாற்றினார். முனைவா் ஆ.ஜோசப் சகாயராஜ் மற்றும் முனைவா் ஜா.பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் ஆகியோர் அறக்கட்டளை அறிமுகவுரையாற்றினர்.

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனக் கல்விக்குழு உறுப்பினர், திருவையாறு அரசர் கல்லூரி மேனாள் தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் ச.திருஞானசம்மந்தம், நன்னூலும் தொடரமைப்பும் என்னும் பொருண்மையிலும், ஈரோடு நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ஐ.செல்வம், கருத்தைக் கவரும் காப்பியங்கள் என்னும் பொருண்மையிலும் உரையாற்றினர்.

இறுதியில் முனைவர் சி.ஆரோக்கிய தனராஜ் நன்றியுரையாற்றினார். நிகழ்வினை முனைவர் ஆ.அடைக்கலராஜ் நெறியாள்கை செய்தார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளைச் சொற்பொழிவுப் பொறுப்பாளா் முனைவா் சி.ஷகிலாபானு செய்திருந்தார்.

 

பேராசிரியா்கள், தமிழ் இலக்கிய மாணவா்கள் உள்பட 134 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனா்.

3

Leave A Reply

Your email address will not be published.