தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி சிறப்பு முகாம்கள்

0
1

தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி சிறப்பு முகாம்கள்

அக்டோபர் – 9  உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வரும்  வாரத்தினை இந்திய அஞ்சல் துறை தேசிய அஞ்சல் வாரமாக கொண்டாடுகிறது. இந்த வருடம் கூடுதல் சிறப்பாக விடுதலை இந்தியாவின் 75வது வருடத்தை போற்றும் விதமாக 11.10.2021 முதல் 17.10.2021 பல்வேறு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும், அவர் கூறியிருப்பதாவது:

4

75வது இந்திய விடுதலை பெருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 11ந்தேதி அஞ்சல் வார விழாவின் துவக்கமாக,  திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 11 கோட்டங்களிலும் 75-வது இந்தியவிடுதலைபெருவிழாவைசிறப்பிக்க 75பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. மேலும் இதற்கான சிறப்பு சேமிப்பு கணக்கு துவங்கும் முகாம்கள் குறிப்பிட்ட கிராமங்கள்/அஞ்சலகங்களில் நடைபெற உள்ளது.

2

12ந் தேதி தேசிய காப்பீட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய மண்டலத்தின் எல்லா கோட்டங்களிலும் உள்ள அஞ்சலகங்களில்  அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

13ந் தேதி 75 இடங்களில் ஆதார் முகாம்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளன. திருபுவனம் பட்டுப்புடவையின் சிறப்பம்சங்களை முன்னிறுத்தி புவிசார் குறியீட்டு சிறப்புடன் சிறப்பு அஞ்சல் உறை கும்பகோணம் கோட்டத்தில், அஞ்சல்தலை சேகரிப்பு தினமான 13.10.2021 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும், தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் கோயில் அருகில் உள்ள அஞ்சலகத்தில் “எனது அஞ்சல் தலை” விற்பனையகம் துவங்கப்பட உள்ளது.

16ந் தேதி அஞ்சல் வார விழாவின் நன்றிக் கொண்டாட்டமாக  இந்திய அஞ்சல் துறையின் முதன்மை சிறப்பு தபால் பட்டுவாடா செய்யப்பட உள்ளது.

கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலை காலத்திலும், தபால் துறை மக்களுக்கு மேற்கூரிய சேவையாற்றி மகத்தான துறையாக விளங்குகிறது. மேலும், மக்கள் பணி ஆற்றவே மேற்கண்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதனை மக்கள் முழுமையாக உபயோகித்து பயன் அடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.