திமுக நிர்வாகிகளை அமர வைத்து கார் ஓட்டிய கே.என்.நேரு

திருச்சி சாஸ்திரி ரோட்டில் அமைந்துள்ள கே என் நேரு அலுவலகத்திற்கு திமுகவின் நகரச் செயலாளர் அன்பழகன் தன் வாங்கிய புதிய இன்னோவா கிரிஸ்டா காருடன் வந்து, திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான நேருவிடம் காட்டி வாழ்த்து பெற்றார். மேலும் சாவியை பெற்று அன்பழகன், மாவட்ட செயலாளர்களின் வைரமணி ஆகியோரை காரில் அமர்ந்து தானே காரை ஓட்டி அமைச்சர் நேரு சுற்றி வந்தார்.
மேலும் அமைச்சர் நேருவை சந்தித்து வந்த பலரும் நேருவிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும், புகைப்படம் எடுத்தும் சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
