எஸ்சி,எஸ்டி மாணவ, மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: திருச்சி மாவட்ட ஆட்சியர்

0
1

எஸ்சி,எஸ்டி மாணவ, மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் உணவும் உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.

2

இந்த விடுதிகளில் சேர பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விடுதிக்கு மாணவர்கள் இருப்பிடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரம் குறையாமல் இருக்க வேண்டும்.

4

விடுதிகளில் சேர தகுதியுடைய மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை விடுதி காப்பாளர் இடமிருந்து இலவசமாக பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து வரும் 18-ம் தேதிக்குள் காப்பகத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.