திருச்சியில் அக்டோபர் – 11 தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்:

திருச்சியில் அக்டோபர் – 11 தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்:
தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் பழகுநர் மேளா மூலம் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருச்சி அரசு தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் அக்டோபர் 11ந் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இம்முகாமில் திருச்சி மாவட்ட அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் ஓராண்டு தொழில் பழகுனர் நியமன ஆணை தொழில் பழகுநர்களுக்கு பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.7000 முதல் ரூ. 9000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே ஐடிஐ முடித்து தேர்ச்சி பெற்ற எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்று அரசு, தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலை வாய்ப்பினை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இம்முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
